கவவிதை

நல்லொழுக்கம் நல்கிடவோர் நற்பண்பு கொண்டோரை நான் இங்கு கண்டதில்லை

நற்குணம்தான் என்றபோதும் கல்விக் கூடம் பக்கம் செல்ல எந்தை தாயும் நினைத்ததில்லை.

ஓரிறைவன் ஒருகுல  மென
ஒலிக்கச் சொல்லி ஒருபோதும் கேட்டதில்லை.

காலங்கள் பல கடந்து
கல்விக் கூடம் ஒன்று வந்து
பயன்கூட ஏதுமில்லை.

கண்ட கனா சரியில்லை
இறைவன் குற்றம்
என்று சொல்லி காளையர்கள் எல்லோரும் கூடி நின்று பேசிடுவார்.

ஈர்ப்பு விசை விலகு விசை
என்றெல்லாம் ஆராய்ந்து 
அறிவியலை ஈர்த்து விட்டால்
இளைஞர்கள் எல்லோரும் 
நல்லறிவு பெற்றிடுவார்.

எழினி யெல்லாம் வந்தாச்சு
உடைகளில் ஏற்றமெல்லாம் ஆயாச்சு
உள்ளடக்கிப் பார்க்கப் போனால்
உற்றா றுறவு எல்லாம்
உருகுலைந்து போயாச்சு.

ஊருக் கொரு கோயில் குலம்
தெருவுக் கொரு சாதி பலகை
வீட்டுக் கொரு காணொளிப் பெட்டி
என்றெல்லாம் முடுக்குவிக்கும்
காரணிகளை சரியாக செய்து விட்டு
மனிதனுக்கு தேவையான
பகுத்தறிவை உருவாகும் 
நூலகம் ஒன்றை 
உருவாக்க மறந்து விட்டோம்.

நூலக அறிவியல்
நமக்கு தேவை
அதற்கு முயற்சி செய்வோம்
வீணான நேரத்தை
பயனுள்ளதாக ஆக்குவோம்.

வாழ்க தமிழ்!
வளரக கல்வி!!
(+)